அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum
அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு
என் தேவன் மண்ணில் வந்ததால்
என் தேவன் வரவு புதிதாகும் உறவு
தம் ஜீவன் மண்ணில் தந்ததால்
சோகங்கள் இனி ஓடியே போகும்
நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும்
கீதங்கள் புதிதாக நாம் பாடவே
தூதர்கள் மண்ணில் தோன்றியே
மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே
மேய்ப்பர்கள் உம்மை போற்றியே
ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே
அன்பென்னும் அலைமோதும் இந்நாளில்
அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில்
இனிதாகும் இனி எங்களின் வாழ்க்கையே
அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு
என் தேவன் மண்ணில் வந்ததால்
என் தேவன் வரவு புதிதாகும் உறவு
தம் ஜீவன் மண்ணில் தந்ததால்
நண்பனே
என் வாழ்வை உமக்காய் தந்தேனே
உன் இதயத்தின் வாசற்படியிலே
இந்நாள் வரை உனக்காய் நின்றேனே
நண்பனே தந்தேனே
கண்களும் எதிர்பார்த்ததே
விண்ணின் புகழ்வேந்தன்
மண்ணில் வருவார் என்றே
ஏழையாய் நீயும் தோன்றினாய்
எங்கள் வாழ்விங்கு இன்று வளமாகுமே
இரட்சிப்பின் புது பாதை தந்தாயே
மன்னிப்பின் உருவாக நின்றாயே
பின் வாழ்வை ஈவாக தந்தாயே நீ