இயேசுநாதனே இரங்கும் என் இயேசு – Yesu Nathnae Erangum En Yesu

Deal Score0
Deal Score0

இயேசுநாதனே இரங்கும் என் இயேசு – Yesu Nathnae Erangum En Yesu

பல்லவி

இயேசுநாதனே!-இரங்கும் என்-இயேசு நாதனே!

அனுபல்லவி

ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே!அருளே! தெருளே! பொருளே!
ஆவல் ஆகினேன், மகா பிரலாபம் மூழ்கினேன்;
ஆயா! நேயா! தூயா! ரட்சியும்;
ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். – இயேசு

சரணங்கள்

1.அருமை ரட்சகனே! உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா!
ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர் மெய்யா!
தருணம், தருணம், கைவிடாதேயும்;தலைவா! வலவா! நலவா!
தாமதியாதே-கிருபைசெய்யும்-சாமி இப்போதே
தாதா! நாதா! நீ தா! நீ கா!
தருமப் பிரகாசனே! பரம சருவேசனே! – இயேசு

2.ஐந்து காயத்தின் கிருபைக்கோட்டையில் அடைக்கலந்தாவே
ஆதாமின் பாவத்தாலே மானிடன் ஆன மெய்வாழ்வே
விந்தைக்கிருபை அளிக்கவேண்டும்;விமலா! நிமலா! அமலா!
வேறுபண்ணாதே-மிகும் சீறு-மாறு நண்ணாதே,
மேலா! கோலா! நூலா! நீயே
விரும்பிச்சேரும், கோவே! திரும்பிப்பாரும், தேவே! – இயேசு

3.உன்னைப்போல் நரர்க்கார் பாடுபட்டது? உரிமைச் சீமானே!
உத்தமமேய்ப்பனே! சத்தியமீட்பனே! உண்மைக் கோமானே!
என்னை ரட்சிப்ப துன்கடன் அல்லவோ?
இறையே! நிறையே! பொறையே!
ஏதம் இல்லானே!-அடியாரைத்-தீது சொல்லானே!
ஏகா! வாகா! ஆகா! இரட்சியும்;
இரக்கமே உன்தஞ்சம்; நெருக்கமே பிரபஞ்சம். – இயேசு

Yesu Nathnae Erangum En Yesu song lyrics in English

Yesu Nathnae Erangum En Yesu Naathanae

Aasai Kiristhena Anbulla Neasanae Arulae Thearulae Porulae
Aaval Aakinean Mahaa Piralaabam Moolkinean
Aaya Neya Thooya Ratchiyum
Aabaththinaal Parithabithu Nirkirean.

1.Arumai Ratchakanae Unai Allamal Aatharavaar Aiya
Aathuma Naayagan Nee Enakallavo Anbu Koor Meiya
Tharunam Tharunam Kaividatheayum Thalaiva Valava Nalava
Thamathiyathae Kirubai Seiyum Saami Ippothae
Thatha Naatha Nee Tha Nee Kaa
Tharuma Pirakasanae Param Saruvveasanae

2.Ainthu Kaayaththin Kirubai Kottaiyil Adaikalanthaavae
Aathaamin Paavaththlae Maanidan Aana Mei Vaazhvae
Vinthai Kirubai Alikka Veandum Vimala Nimala Amala
Vearu Pannathae Migum Seeru Maaru Nannathae
Maela Koala Noola Neeyae
Virumbi Searum Kovae Thirumbi Paarum Devae.

3.Unnai Poal Nararkaar Paadupattathu Urimai Seemanae
Uththama Meippanae Saththiya Meetpanae Unmai Komanae
Ennai Ratchipathun Kadan Allavo
Iraiyae Niraiyae Poraiyae
Yeatham Illanae Adiyaarai Theethu Sollalanae
Yeaga Vaaga Aaga Ratchiyum
Erakkamae Un Thanjam Nerukkamae Pirapanjam.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo