இயேசுவின் வருகை நெருங்குதே – Yesuvin Varugai Nerunguthae
இயேசுவின் வருகை நெருங்குதே – Yesuvin Varugai Nerunguthae
இயேசுவின் வருகை நெருங்குதே
ஆயத்தமாகிடுவோம்
இயேசுவின் வருகை சமீபமே
விழிப்புடன் இருப்போம்
எக்காள சத்தத் தொனியுடனே
மேகங்கள் மீதே வருகின்றாரே
திருடன் வருகின்ற வேளையை வீட்டெஜமான்
அறிந்தால் ஆயத்தமாகிடுவான்
நினையாத நாழிகையில் மனுஷ குமாரன்
தூதர்களோடே வந்திடுவார்
நாம் ஆயத்தமாக இல்லையென்றால்
கைவிடப்படுவது நிச்சயமே
அழைக்கப்பட்டவர்கள் அனேகராயிருக்க
தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் சிலரே
எதை இழந்தாலும் நித்தியத்தை இழந்தால்
நம் வாழ்வின் நிலைமைப் பரிதாபமே
நாம் ஆயத்தமாக வாழ்ந்திடும் போது
கர்த்தரின் வருகயில் காணப்படுவோம்