இயேசு என்று சொல்லுவோம் – Yesu Endru Solluvom
இயேசு என்று சொல்லுவோம் – Yesu Endru Solluvom
இயேசு என்று சொல்லுவோம்
இதயத்தை வெல்லுவோம்
இந்தியாவின் எல்லை எங்கும்
இயேசு நாமம் சொல்லுவோம்
1.அலை அலையாய் எழும்பிடுவோம்
அக்கினியாய் நாம் பரவிடுவோம்
மலைகளை நாம் தகர்த்திடுவோம்
மனம் தளராமல் முன்னேறுவோம்
2.சிங்கத்தின் வாய்களை கிழித்திடுவோம்
ஜனங்களை நாம் மீட்டிடுவோம்
சபைகளை நாம் பெருக்கிடுவோம்
சாட்சியாக வாழ்ந்திடுவோம்
3.உடன்படிக்கை பெட்டி நாமே
ஊர் ஊராக வலம் வருவோம்
உடைந்திடுமே தாகோன் எல்லாம்
உயர்த்திடுவோம் இயேசுவையே
4. கண்ணீரோடு விதைத்திடுவோம்
கெம்பீரமாய் அறுத்திடுவோம்
முடிந்ததென்று முழக்கமிட்டு
முற்றிலும் நாம் ஜெயமெடுப்போம்