இராஜாதி இராஜன் மகிமையோடே
இராஜாதி இராஜன் மகிமையோடே
வான மேகத்தில் எழுந்தருள்வார்!
எக்காள சத்த தொனி கேட்கிறதே
ஆட்டு குட்டியின் கல்யாண நாளிது!
பதினாயிரம் பரிசுத்தர்கள் சூழ
எழுந்து நீதி செய்குவார்
எந்தன் நேசர் தம் கரம் அசைத்தே
அன்பாய் என்னையும் அழைத்து செல்வார்
சுத்த பிரகாச ஆடையுடனே பரிசுத்தர்கள்
உம்மை பணிந்து கொள்வார்
கண்ணீருமில்லை கவலையில்லை
இயேசு ராஜாவே நம் சொந்தமானார்