உம்மைப் பற்றிக் கொள்கிறேன் – Ummai Patrikolkirean
உம்மைப் பற்றிக் கொள்கிறேன் – Ummai Patrikolkirean
F-maj: 6/8 beat/T-137
உம்மைப் பற்றிக் கொள்கிறேன்
உம்மைப்பாடிப் போற்றுவேன்
உம்மை பணிந்து தொழுகிறேன்
பரலோக தந்தையே
1. கோடானகோடி தூதர்கள்
உம்மை ஓய்வின்றி துதிக்கிறார்களே
உம்முடைய பிள்ளை நானய்யா
உம்மை ஓய்வின்றி துதிக்கிறேனைய்யா
2. ஆபிரகாம் ஈசாக்கெல்லாம்
உம்மை ஆராதித்து மகிழ்;ந்தார்களே – உம்மை
மகிழ்ச்சியோடு ஆராதிக்கின்றேன்
என்னை புகழ்ச்சியோடு வைப்பீரைய்யா
3. வானம் உம் சிங்காசனம்
பூமி உங்க பாதப்படி
பாதம் அமர்ந்து கற்றுக் கொள்கிறேன்
உங்க பாதையிலே நடந்து செல்கிறேன்
4. அக்கினியில் போட்டார்களே
அப்பா நீங்க வந்தீங்களே
அக்கினி அழிக்கவேயில்லை – உங்க
அன்பினால் காத்தீங்களே
5. ஆதி சபை மக்கள் எல்லாம்
ஒன்று சேர்ந்து ஜெபித்தார்களே
ஒன்று சேர்ந்து ஜெபிக்கிறோமைய்யா
உம் அரசு வரவேண்டுமே
6. ஆராய்ந்து அறிபவரே
என் ஆற்றலாய் உள்ளவரே
ஆயுள் எல்லாம் அன்பு கூருவேன்
உங்க அருகில் ஆடிப்பாடுவேன்