என் கண்ணில் உள்ள – En Kannil ulla kannerellam Lyrics
என் கண்ணில் உள்ள – En Kannil ulla kannerellam Lyrics
என் கண்ணில் உள்ள கண்ணீரெல்லாம்
உன் பாதத்திலே ஊற்றிவிட்டேனே
என் மனதில் உள்ள பாரங்களெல்லாம்
இயேசுவிடம் சொல்லி அழுதேனே – நான் (3) – என் கண்ணில்
சரணங்கள்
1) நான் பள்ளதாக்கில் நடந்தபோதெல்லாம்
லீலிபுஷ்பமாக நீர் இருந்தீரே – (2)
நான் பாதாளத்தில் விழுந்தபோதெல்லாம்
உம் கரத்தில் தாங்கிவிட்டீரே-(2) – என் கண்ணில்
2) மாயை அன்பு நிறைந்த உலகிலே
உந்தன் அன்பு பெரிதே ஐயா – (2)
மனிதன் அன்பு மாறிவிட்டாலும்
உந்தன் அன்பு மாறாதய்யா – (2) – என் கண்ணில்
3) நான் மரண இருளில் நடந்த போதெல்லாம்
நீர் மரணத்தை ஜெய்தீரையா -(2)
நான் வியாதியிலே இருந்த போதெல்லாம்
உந்தன் தழும்புகளால் குணமாக்கினீர். – என் கண்ணில்