என் வாழ்வின் என் ஏக்கமெல்லாம் – En Valvin En Yeakkamellam
என் வாழ்வின் என் ஏக்கமெல்லாம் – En Valvin En Yeakkamellam
D- maj/walts/T-145
என் வாழ்வின் என் ஏக்கமெல்லாம்
இயேசுவே நீர் தானே ஐயா
1. தண்ணீரில்லா நிலம்போல
தகப்பனே உமக்காய் ஏங்குகிறேன்
தருகின்றேன் என்னையே ஐயா
தடுமாற்றம் எனக்கில்லை ராஜா
2. என் கண்கள் உமைக்காணும்
என் கரங்கள் உம்கரம் கோர்க்கும்
உறவாடி மகிழ்;வேனே ஐயா
உம்மையே நேசிப்பேன் ராஜா
3. உம்மோடு தான் நான் இருப்பேன்
உம்மைத் தானே நான் துதிப்பேன்
உமக்கு இணையில்லை ஐயா
உம்மைப் போல் யாருண்டு ராஜா
4. உம் குரலை நான் கேட்பேன்
உம் சித்தம் தான் செய்வேன்
ஊழியம் செய்வேனே ஐயா
உமக்காக வாழ்வேனே ராஜா