கண்ணான கண்ணே கன்னி மரி – Kannana Kanne Kanni Mari
கண்ணான கண்ணே கன்னி மரி – Kannana Kanne Kanni Mari
கண்ணான கண்ணே கன்னி மரி பொன்னே
கனிவான என் செல்வமே
பண்பாகும் நெஞ்சில் பரிசாக மண்ணில்
மெய்கொண்ட விண் தெய்வமே – என்
மனதோடு மழையாக நீ வீழ்கிறாய்
என் வாழ்வில் வளமாகிறாய் (2)
கிடைக்காக்கும் இடை மாந்தர் உனை நாடினார் – நீ
கடையோரைக் கடைந்தேற்றும் முகம் காட்டினாய்
வழிதேடும் ஞானியர் விண்ணொளி நோக்கினார் – உன்
ஒளிதேடி வருவோரின் வழி மாற்றினாய்
துணையாக வந்து என் துயர் போக்கும் தெய்வம்
பிணையாக நின்று என் உயிர் மீட்கிறாய் (2)
தொழுவோரம் பிறந்தாலும் தொழுதேத்தும் என் தெய்வம்
ஆராரோ… ஆராரோ… ஆராரோ… ஆராரிரோ…
பொன் முகத்தில் புன்னகையோ!
புதுயுகத்தின் முகவரியோ!
இன்னல் தீர்க்க வந்த
கன்னல் கனிரசமே! – என்
உள்ளம் திறந்து வைத்தேன்!
பிள்ளாய் பிறந்து நீ வா!
புதுவானில் புகழ் பாடும் இறைத் தூதர்கள் – இப்
புவிமீதில் புதுவாழ்வின் ஒளிக்கோலங்கள்
இறைவாக்கு நிறைவேற வடிவாகினாய் – நல்
உறவாக என் வீட்டில் குடியேறினாய்
குடில் தேடி வந்து என் குலம் வாழ வைத்தாய்
அறம் சூடும் நெஞ்சில் நீ அருள் செய்கிறாய் (2)
ஆராரோ நான் பாடி ஆறாகும் பேரின்பம்
ஆராரோ… ஆராரோ… ஆராரோ… ஆராரிரோ
Kannana Kanne Kanni Mari song lyrics in english
Kannana Kanne Kanni Mari Ponnae
Kanivana Ena selvamae
panpaagum Nenjil Parisaga Mannil
Meikonda Vin Deivamae En
Manathodu Mazhaiyaga Nee Veezhkiraai
En Vaazhvil Valamakiraai-2
Kidaikakkum Idai Maanthar Unai Naadinaar -Nee
Kadaiyorai Kadaitheattrum Mugam Kaattinaai
Vazhitheadum Gnaniyar Vinnoli Nokkinaar Un
Ozhi Theadi Varuvorin Vazhi Maattrinaai
Thunaiyaga Vanthu En Thiuyar Pokkum Deivam
Pinaiyaga Nintru En Uyir Meetkiraai-2
Thozhuvoram piranthalaum Thozhutheathum En Deivam
Aararo Aararo Aariraro
Pon mugaththil Punnagaiyo
Puthuyugaththin Mugavariyo
Innal Theerkka Vantha
Kannal Kanirasamae En
Ullam Thiranthu Vaithean
Pillaiyaai Piranthu Neer Vaa
Puthu Vaanil Pugal Paadum Irai Thoothargal Ippuvi
Puthu Vaalvin Ozhikolangal
Iraivakku Niraiveara Vadivaginaai Nal
Uravaga En Veettil Kudiyearinaai
Kudil Theadi Vanthu En Kulam Vaazha Vaithaai
Aram Soodum Nenjil Nee Arul Seikiraai-2
Aararo Naan paadi Aaraagum Pearinbam
Aararo Aararo Aariraro