காரிருள் நேரத்தில கடுங்குளிர் – Kaarirul Nerathila Kadunkulir
காரிருள் நேரத்தில கடுங்குளிர் – Kaarirul Nerathila Kadunkulir
காரிருள் நேரத்தில கடுங்குளிர் வேளையில
வானெங்கும்
கேட்கிறதே ஆனந்த சங்கீதமே – 2
பாவத்தின் அதிகாரம் பறந்தோடி போக
பேரின்ப நற்செய்தி புவியெங்கும் வீச
பிறந்தாரையா மண்ணுல இயேசு சாமி
மனுசனாக நமக்காய் பிறந்தாரையா
பிறந்தாரையா மண்ணுல இயேசுசாமி
மனுசனாக நமக்காய் பிறந்தாரையா
காரிருள் நேரத்தில்….
மேளதாளம் இல்ல ஆட்டம் பாட்டம் இல்ல
இரத்தின கம்பளம் இல்ல மால தோரணம் இல்ல – 2
கந்ததுணி கோளமா கண்ணுக்கு இலட்ச்சனமா கன்னிமரி மடியில மந்தைக்கு மத்தியில
விசுவாசி நம்மையும் விண்ணகம் சேர்த்திட
சமாதான சந்தோசம் பூமியில தங்கிட
ஏழையாக வந்தார் எனக்காக வந்தார்
மீட்பராக வந்தார் மீட்டெடுக்க வந்தார்
காரிருள் நேரத்தில்….
வானவர் கூட்டம் பாட ஆயர் குலாம் கூட
ஏரோது கதிகலங்க இராஜ சிங்கம் வந்தாரு -2
விண்ணக மகிமையா மண்ணக மகிழ்ச்சியா
வேதங்கள் நிறைவேற வெற்றிக் கொடி நாட்டிட
பெத்தலகேம் ஊருல தாவீது வம்சத்தில நிம்மதிய தந்திட நீதியை காத்திட -2
ஏழையாக வந்தார் எனக்காக வந்தார்
மீட்பராக வந்தார் மீட்டெக்க வந்தார்
காரிருள் நேரத்தில்