கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து
கிறிஸ்து இயேசு இராச்சியம் வளர்ந்து பெருகுக
உலகமெங்கும் இன்ப இயேசு நாமம் முழங்க
1. கிருபை பெற்று தூய வாழ்வில் வளருக
இருளை நீக்கி அன்பின் ஒளியில் பெருகுக – கிறிஸ்து
2. ஈகையோடு வலிமைபெற்று வளருக
ஈடில்லாத அறுவடையில் பெருகுக – கிறிஸ்து
3. என்ன வந்தபோதும் நிலைத்து வளருக
இன்ப கீதம் பாடித் துதித்துப் பெருகுக – கிறிஸ்து