சத்துருவின் உட்புகுதல் – Sathuruvin Utpuguthal
சத்துருவின் உட்புகுதல் – Sathuruvin Utpuguthal
G-min/Techno/T-132
சத்துருவின் உட்புகுதல் இருக்காது
சாபங்கள் இனிமேல் நிலைக்காது
கூக்குரல் குழப்பங்கள் இருக்காது
குதூகலம் இனிமேல் குறையாது
பயத்தோடு ஆராதிப்போம்
பக்தியோடு ஆராதிப்போம்
பிரியமாய் ஆராதிப்போம்
1. தண்ணீர்கள் தானியம் குறையாது
தடைசெய்ய சாத்தானால் முடியாது
2. பெலவீனம் வியாதிகள் இருக்காது
பெலனாய் சுகமாய் இருப்பாரே
3. கண்ணீர்கள் கவலைகள் மாற்றிடுவார்
கருத்தாய் நம்மை காப்பாரே
4. சஞ்சலம் தவிப்பும் ஓடிடுமே
சந்தோஷம் நமக்குள் இருந்திடுமே
5. வானம் வெண்கலமாய் இருக்காது
வயலை Ìச்சி கெடுக்காது
6. குருடும் மலடும் இருக்காது
கூப்பிட்டால் பதிலை தருவாரு
7. ஆடுகள் மாடுகள் பெருகிடுமே
ஆசீர்வாதம் குறையாது
8. வியாதிகள் பெலவீனம் இருக்காது
காயங்களால் சுகம் தருவாரு
9. ஏக்கங்கள் எண்ணங்கள் பார்ப்பாரு
எல்லாம் நிறைவேற்றி முடிப்பாரு
10. எதிரியின் ஆயுதம் வாய்க்காது
எதிர்ப்போரை கைப்பார்ப்பாரு
11. சாத்தானே தலையை உயர்த்தாதே
காலால் உன்னை மிதிப்பாரே
12. கவலைகள் கண்ணீர்கள் இருக்காது
கண்ணீரை அவர் துடைப்பாரு
13. வறட்சியும் உஷ்ணமும் இருக்காது
குளிர்ந்த மேகமாய் இருப்பாரு
14. வறுமைகள் தனிமைகள் இருக்காது
தாயாய் தகப்பனாய் இருப்பாரு