சாய்ந்திட தோள்கள் தாரும்
சாய்ந்திட தோள்கள் தாரும்
ஏந்திட கைகள் தாரும்
அப்பா உம் மடியிலே நான்
எப்போதும் தங்கியிருப்பேன்-2
தகப்பனே என் தஞ்சம் நீர் தானே
தகப்பனே என் பிரியம் நீர் தானே
தகப்பனே எம் உறவு நீர் தானே
தகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே
1.தவறாமல் தினமும் துரோகம்
செய்திட்ட பாவி நானே
வெள்ளையான உங்க அன்பு
பிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே
2.தூரமாய் கண்டு என்னை
ஓடி வந்து அணைத்து கொண்டீர்
முத்திரை மோதிரம் தந்து
சுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே
3.நாட்களோ கடைசி நாட்கள்
காலமோ பொல்லாத காலம்
உம்மை மட்டும் அண்டிக்கொள்ள
உந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே