தரிசனம் நீ தரவேண்டும் – THARISANAM NE THARAVENDUM song lyrics
தரிசனம் நீ தரவேண்டும் இயேசு தெய்வமே – என்றும்
அன்பு செய்து உள்ளம் வாழும் அமைதியிலே – 2
உலகம் ஒரு சமநீதி குடும்பமாகவே – 2
என் இல்லம் எங்கும் இறைவன் வாழும் கோயிலாகவே
தரிசனம் தா உந்தன் தரிசனம் தா – 2
1. மடி நிறையப் பொருளிலிருந்தும் மனம் நிறையப் பகையிருந்தால்
மனதில் என்று அமைதி வரும் நண்பனே ஆ…
வழிகளிலே ஒளியிருந்தும் விழிகளிலே இருளிருந்தால்
வாழ்வில் என்று நிறைவு வரும் அன்பனே
நீதியில் நாம் வாழ்ந்தால் வீதியில் தெய்வம் வரும்
சாதியை நாம் ஒழித்தால் சமத்துவத்தென்றல் வரும்
ஒருமுறை தான் பூக்கும் வாழ்வில் மணம் பரப்புவோம்
நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்
அமைதி வரும் நெஞ்சில் அமைதி வரும்
2. தர்மங்களும் நியாயங்களும் அனைவருக்கும் சமமானால்
வானம் என்னும் கூரையின் கீழ் வறுமையும் ஏனோ ஆ…
சுயநலத்தில் அயலவரின் சுதந்திரத்தை மறுக்கிறோம்
வன்முறையால் நாட்டின் அமைதி குலைக்கிறோம்
மதவெறி நாம் மறப்போம் மனிதனை நாம் நினைப்போம்
உயிர்களை நாம் மதிப்போம் உறவுகள் தினம் வளர்ப்போம்
உலகமெங்கும் பிரிவினையின் சுவர்களுடைப்போம்
நனவாகும் நம் கனவுகள் நிஜமாகும்
அரசு வரும் இறைவன் அரசு வரும்