திருமுகத் தெளிவற்று – Thirumuga Thelivattru

Deal Score0
Deal Score0

திருமுகத் தெளிவற்று – Thirumuga Thelivattru

கண்ணிகள்

1.திருமுகத் தெளிவற்று; பெருவினைகளில் உற்று
சீர்கெட்ட பாவி ஆனேன்; -நான்
ஒரு முகமாய் உனதிடம் மனந் திரும்பிட,
ஊக்கம் அருள், பரனே.

2.துரிச்சையினால் என் அசுத்தம் நிறைந்து நல்
சோபிதம் தான் இழந்தேன்; -பேய்ப்
பரீட்சையினாலும் மயக்கம் அடையும் இப்
பாவிக் கிரங்கையனே.

3.பாதகர் மீதில் பரிதப்பியாமலும்
பாவம் பொறாமலும் நீ -சுத்த
நீதியை நோக்கில் உனது சமூகத்தில்
நிற்பவர் ஆர், துய்யனே?

4.தன் புண்ணியத்தால் எவனும் மன்னிப்புறத்
தக்கவன் இல்லை மெய்யாய்;-எந்தை
உன் தயையால் உன் திருச்சுதன் மூலமாய்
உண்டு பொறுப் பெனக்கே.

5.மண்ணையே நோக்கி உழன்று தவிக்கும் என்
வஞ்சக நெஞ்சதனை-நேராய்
விண்ணையே நோக்கிடப் பண், இறைவா, உனை
வேண்டி மன்றாடுகின்றேன்.

6.மாறுபாடான இவ் வேழைக் கிரங்கி நீ
மன்னிப்பருள்வதன்றி,-எனக்
காறுதலாக உனது நல் ஆவியை
அனுக்கிரகித் தாள், பரனே.

Thirumuga Thelivattru song lyrics in English

1.Thirumuga Thelivattru Peruvinaikalil Uttru
Seer Ketta Paavi Aanean Naan
Oru Mugamaai Unthidam Manam Thirumbida
Ookkam Arul Paranae

2.Thurisaiyinaaal En Asuththam Niranthu Nal
Sobitham Thaan Elanthean Pei
Paritchaiyinaalum Mayakkam Adiyum
Ippaavi Eirangaiyanae

3.Paathagar Meethil Parithappiyamalum
Paavam Poramalum Nee Suththa
Neethiyai Nokkil Unathu Samugaththil
Nirpavar Aar Thuiyanae

4.Than Punniyaththaal Evanum Mannipura
Thakkavan Illai Meiyaai Enthai
Un Thayaiyaal Un Thirusuthan Moolamaai
Undu Poruppenakkae

5.Mannaiyae Nokki Ulanthu Thavikkum En
Vanjaga Nenjathanai Nearaai
Vinnaiyae Nokkidan Pan Iraivaa Unai
Veandi Mandradukiran

6.Maarupaadana Evvelaiyaikirangi Nee
Manniparulvathantri Ena
Kaaruthalaga Unathu Nal Aaviyai
Anukirakithaal Paranae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo