நான் ஜெபமாக மாறவேண்டும் – Naan Jebamaga Maaravendum
நான் ஜெபமாக மாறவேண்டும் – Naan Jebamaga Maaravendum
நான் ஜெபமாக மாற வேண்டும்
உம் அருளோடு வாழ வேண்டும்
என் மனதோடு உறவாடும் இயேசு உந்தன் குரலை
நான் மகிழ்வோடு கேட்க வேண்டும்
நான் ஜெபமாக மாற வேண்டும்
உம் அருளோடு வாழ வேண்டும்
சந்திப்பு கூடாரம் என்மனதில் -அங்கு
தெய்வீக சந்திப்பு நிகழட்டும்
சீனாயின் மலைமுகடு என் மனதில் அங்கு
அருள் மேகம் மகிமையோடு நிரம்பட்டும்
ஓரேபு மலை உச்சி என் மனதில் அங்கு
வான் வீட்டின் தென்றல் வந்து பாயட்டும்
எருசலேமின் தேவாலயம் என் மனதில்
அது அப்பாவின் ஜெப வீடாய் மாறட்டும்
ஜெபமானது என் உயிராகட்டும்
ஜெப ஆவியே என் மூச்சாகட்டும்
ஜெபமானது என் உயிராகட்டும்
ஜெப ஆவியே என் மூச்சாகட்டும்
நான் ஜெபமாக மாற வேண்டும்
உம் அருளோடு வாழ வேண்டும்
பெத்லேகமின் தீவனத்தொட்டி என் மனதில்
அங்கு தெய்வீகம் குழந்தையாகி தவழட்டும்
நசரேத்தின் எளிய வீடு என் மனதில் அங்கு
தெய்வீகம் இயேசுவாக வளரட்டும்
கலிலேயா யூதேயா என்மனதில் அங்கு
கடவுளின் வார்த்தைகள் ஒலிக்கட்டும்
கல்வாரி மலை உச்சி என்மனதில்
அன்பும் மன்னிப்பும் ஆறாய் பொங்கி பெருகட்டும்
ஜெபமானது என் உணவாகட்டும்
ஜெப ஆவியில் என் தாகம் தீரட்டும்
ஜெபமானது என் உணவாகட்டும்
ஜெப ஆவியில் என் தாகம் தீரட்டும்
நான் ஜெபமாக மாற வேண்டும்
உம் அருளோடு வாழ வேண்டும்
என் மனதோடு உறவாடும் இயேசு உந்தன் குரலை
நான் மகிழ்வோடு கேட்க வேண்டும்
நான் ஜெபமாக மாற வேண்டும்
உம் அருளோடு வாழ வேண்டும்