நான் பாடும் கானங்களால்

Deal Score0
Deal Score0

நான் பாடும் கானங்களால்
என் இயேசுவைப் புகழ்வேன்
எந்தன் ஜீவிய காலம்வரை
அவர் மாறாத சந்தோஷமே – நான்

1. பாவ ரோகங்கள் மாற்றியே
எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே
உலகம் வெறுத்தென்னைத் தள்ள
பாவியம் என்னை மீட்டெடுத்தீர் – நான்

2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை
யாதொரு பயமுமில்லை
அவர் ஸ்நேக தீபத்தின் வழியில்
தம் கரங்களால் தாங்கிடுவார் – நான்

3. நல்ல போராட்டம் போராடி
எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன்
விலையேறிய திருவசனம்
எந்தன் பாதைக்குத் தீபமாகும் – நான்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo