நின் பாதம் துணை அல்லால் – Nin Paatham Thunai Allaal
நின் பாதம் துணை அல்லால் – Nin Paatham Thunai Allaal
பல்லவி
நின் பாதம் துணை அல்லால், வேறொரு துணை
இல்லை,- நித்ய பரம போதா.
அனுபல்லவி
என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ,
ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா! – நின்
சரணங்கள்
1.ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்;
ஜாதி அனைத்தும் உய்ய, நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில் இறந்தீர்;
வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும் சிறந்தீர்;
ஏதம் இல்லாத அனாதி திருமகனே.
எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா! – நின்
2.தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும், சித்தம் இரங்கி வாரும்;
மேவி எனது வினை யாவும் அகல இந்த வேளை எனையும் காரும்;
பாவிக்குதவியாக, மனுவேலே, நீர் பட்ட பாடனைத்தையும் பாரும்;
ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன்;
ஆபத்தை நீக்கும், ஐயா, இப்போ மெய்யாய்! – நின்
Nin Paatham Thunai Allaal song lyrics in English
Nin Paatham Thunai Allaal Vearoru Thunai
Illai Nithya Parama Potha
En Paavam Pokkiyae Kirubai Puriyum Swami
Yeaga Vasthuvaana Yeasu Kiristhu Naatha
1.Aathi Manitharukkan Rothiyapadi Manu avatharamaai Pirantheer
Jaathi Anaithum Uiya Neethikentru Thalai Saithu Kurusil Irantheer
Vedham Muluthum Nirai Veattri Kadaisiyilae Vettri Mudiyum Sirantheer
Yeatham Illatha Anaathi Thirumaganae
Engum Niranthilangum Yeasu Kiristhen Devaa
2.Devareeruku Yearkaatha Kuttram Seithirunthaalum Siththam Irangi Vaarum
Meavi Enathu Vinai Yaavum Agala Intha Vealai Enaiyum Kaarum
Paavikkuthaviyaaga Manuvealae Neer Patta Paadanaithaiyum Paarum
Aavalaaga Unai Adainthu Saran Pugunthean
Aavbaththai Neekkum Aiya Ippo Meiyaai.