நீர் சொன்னால் போதும் – Neer Sonnaal pothum
நீர் சொன்னால் போதும் – Neer Sonnaal pothum
நீர் சொன்னால் போதும்
யாவும் மாறிடும்
உம் வார்த்தையாலே
யாவும் நிற்கும் நிற்கும் (2)
சர்வ வல்ல தேவனே
சேனைகளின் கர்த்தர் நீரே (2)
வானம் உமது
பூமி உமது
வார்த்தையாலே நீர்
சிருஷ்டித்தீரே
காற்றும் கடலும்
நீர் சொல்லிட
நிற்கும் நடுங்கும்
வல்ல தேவனே (2)
பேய்கள் நடுங்கும்
நோய்கள் விலகும்
சாபங்கள் எல்லாம்
கரைந்தோடிடும்
தீய சேனையின்
தந்திரங்களும்
ஓர் வார்த்தையினாலே
உருண்டோடிடும் (2)