பாவம் பெருகுதே – Paavam Peruguthae

Deal Score+1
Deal Score+1

பாவம் பெருகுதே – Paavam Peruguthae

பல்லவி

பாவம் பெருகுதே
பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே!

சரணங்கள்

1. ஆத்துமா இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே – பாவம்

2. இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார் – பாவம்

3. தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
தூங்கிக் களைத்துப் போனார் – பாவம்

4. எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன்
என்றவர் அழைக்கும் தூய சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே – பாவம்

5. ஜீவனை வெறுத்துத் தியாகமாய்
சேவையும் செய்திடுவேன்
சேவைக்கு ஈடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார் – பாவம்

6. வெறுங்கையாய் பரலோகத்தில்
வந்திடோம் இயேசு நாதா
ஆத்துமா ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும் – பாவம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo