பெத்லேகேம் ஊரிலே தேவசுதன்-Bethleham Oorilae Deva suthan
பெத்லேகேம் ஊரிலே
தேவசுதன் பிறந்தார்
பூமியில் தேவ பிரசன்னம்
மனிதற்கு சமாதனம்
ஒரு பாடல் பாடல் பாடல் பாடல்
இது தூதர்கள் பாடிய சந்தோஷ பாடல்
பெத்லெகேம் தொழுவத்தில் கேட்ட பாடல்
நடுவானில் நள்ளிரவில் பேரொளி தோன்றிட
தூதர்கள் வானத்தில் நற்செய்தி கூறிட
பூவின் பாவங்கள் போக்கிட வந்த நம்
மேசியா பாலன் பெத்லேமில் பிறந்தார்
மந்தையின் மேய்ப்பர்கள் வயல் வெளி தங்கிட
வானத்தின் விந்தையை கண்டு வியந்திட
சாஸ்த்ரிகள் வந்து பணித்து வணங்க நம்
ரட்சகர் இயேசு பெத்லேமில் பிறந்தார்