போற்றிப் புகழ்ந்திடுவோம் அல்லேலூயா -Pottri pugalnthiduvom

Deal Score+1
Deal Score+1

போற்றிப் புகழ்ந்திடுவோம் அல்லேலூயா -Pottri pugalnthiduvom song lyrics

பல்லவி

போற்றிப் புகழ்ந்திடுவோம், அல்லேலூயா – துதி
சாற்றி மகிழ்ந்திடுவோம், அல்லேலூயா

அனுபல்லவி
கடந்திட்ட காலமெல்லாம் கண்ணின் மணியைப் போலக்
காத்தாரே தேவன் நம்மை அல்லேலூயா தினம் – போற்றி

சரணங்கள்

1. பாவத்தைப் போக்கினாரே அல்லேலூயா – பாவ
சாபத்தை மாற்றினாரே அல்லேலூயா!
பாவத்தினாலுண்டான ரோகத்தை மாற்றியவர்
சோகத்தைத் தீர்த்ததாலே அல்லேலூயா – தினம் – போற்றி

2. தாய் உன்னை மறந்தாலும், அல்லேலூயா – தம்
சேயைப்போல் காத்திடுவார், அல்லேலூயா
நேயன் நம் இயேசுகிறிஸ்து தாயினு மேலவராய்
தூயவரம் அளித்தார், அல்லேலூயா – தினம் – போற்றி

3. சோதனைக் காலத்திலே அல்லேலூயா – நாம்
வேதனைப் பட்டிட்டாலும் அல்லேலூயா!
நாதன் நம் இயேசுகிறிஸ்து வேதம் நமக்கிருக்க
சேதம் ஒன்றும் வராது அல்லேலூயா – தினம் – போற்றி

4. பயங்கரப் புயல் உன்மேல், அல்லேலூயா – வெகு
வேகமாக வீசினாலும் அல்லேலூயா
கப்பலிலுள்ள கிறிஸ்து கரங்கொண்டு காத்திடுவார்
தட்டியெழுப்பிடுவாய், அல்லேலூயா – தினம் – போற்றி

5. பூமி முழுவதிலும், அல்லேலூயா – உன்னை
சாட்சியாய் வைத்திடுவார் அல்லேலூயா
மறுதலித்தாலும் நீதான் மனங்கசந்தழுதுமே
அருகில் வந்தாலணைப்பார், அல்லேலூயா – தினம் – போற்றி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo