போ அற்பமாம் சிற்றின்பமே – Po Arpamaam Sittrinbamae
போ அற்பமாம் சிற்றின்பமே – Po Arpamaam Sittrinbamae
1.போ, அற்பமாம் சிற்றின்பமே;
போ, கெட்ட லோக இச்சையே,
வா, தேவ நேசமே; வாவேன்;
நான் உனதாலயம் ஆவேன்.
2.தேவ குமாரன் ஜீவனை
கொடுத்த திவ்ய நேசத்தை
நினைத்து இச்சை யாவையும்
வெறுத்துத் தள்ளச் செய்திடும்.
3.ஓர் நிமிஷ சிற்றின்பமே
அநந்த நோவுண்டாக்குமே;
பற்றாசை நீக்கி என்னிலே
மேலான சிந்தை தாருமே.
4.நான் மோட்சத்தில் பங்கற்றோனாய்
போகாதபடி உண்மையாய்
சீர்பட்டு உம்மை நேசிக்கும்
நேசத்தை என்னில் ஊற்றிடும்.
5.இம்மையில் மாந்தர் அறிவை
கடந்த பேரானந்தத்தை
மேலுலகாம் பரத்திலே
கிடைக்கப் பண்ணும், கர்த்தரே.
Po Arpamaam Sittrinbamae song lyrics in English
1.Po Arpamaam Sittrinbamae
Po Ketta Loga Itchaiyae
Vaa Deva Neasamae Vavaean
Naan Unathalayam Aavean
2.Deva Kumaaran Jeevanai
Koduththa Dhivya Neasaththai
Ninaithu Itchai Yaavaiyum
Veruththu Thalla Seithidum
3.Oor Nimisha Sittrinbamae
Anantha Novundakkumae
Pattrasai Neekki Ennilae
Mealanaa Sinthai Thaarumae
4.Naan Motchaththil Pangeattronaai
Pogathapadi Unmaiyaai
Seerpattu Ummai Neasikkum
Neasaththai Ennil Oottridum
5.Immaiyil Maanthar Arivai
kadantha Pearananthathai
Mealulakaam Paraththilae
Kidaikka Pannum Kartharae