மணவாட்டியே மகிழ்ந்து பாடம்மா – Manavattiyae Magilnthu Paadamma
மணவாட்டியே மகிழ்ந்து பாடம்மா – Manavattiyae Magilnthu Paadamma
F-maj:6/8 beat/T-125
மணவாட்டியே மகிழ்ந்து பாடம்மா
மணவாளன் இயேசு வருகிறார்
ஜனத்தைக் கூட்டி சேரம்மா
வருகையில் சேர்த்துக் கொள்வாரே
மணவாளனே ஆராதனை
துணையாளரே ஆராதனை
1. வேதத்தை கையில் ஏந்தம்மா
வேத வெளிச்சத்தில் நடந்து செல்லம்மா
2. கண் விழித்து கருத்தாய் ஜெபியம்மா
விண்ணை நோக்கி பயணம் தொடரம்மா
3. சத்தியத்தை எங்கும் சொல்லம்மா
நித்திய ஜீவனை சுமந்து செல்லம்மா
4. மன்னித்து மறந்து வாழம்மா
மனமகிழ்ச்சி உனது சொத்தம்மா
5. குளித்து எண்ணேய் பூசம்மா
வஸ்திரம் மாற்றி வாழ்த்திப்பாடம்மா