மத்திய பானத்தில் மிக நித்தியம் – Maththiya Paanaththil Miga Niththiyam

Deal Score0
Deal Score0

மத்திய பானத்தில் மிக நித்தியம் – Maththiya Paanaththil Miga Niththiyam

பல்லவி

‘மத்திய பானத்தில் மிக நித்தியம் கருத்து வைக்கும்
மானிடரே, கேளீர்.

அனுபல்லவி

புத்தி மழுங்கவும் நும் புகழ் அழிந்திடவுமே
சித்தம் உமக்குண்டானால் தெளிந்து குடியும்; சும்மா

சரணங்கள்

1.பாம்பை மடியில் வைப்பாரோ?-பழகினாலும்;
பயம் இன்றி அதை மொய்ப்பரோ?
வேம்பு கசப்பில், என்பரோ?-மதுக் குடிக்க
விரும்பு கின்றீர், நல்லதோ?
நாம் பிசகோம் என்றும், நடந்து திரிவோம், என்றும்
வீம்புகள் சொல்வதேன்? விழுவீர்,விழுவீர்,காணும்;

2.கைப் பொருள் இழந்திடவும்-புதல்வரொடு
காதலி அழிந்திடவும்
மெய்ப் பொருள் மறைந்திடவும் -எரி நரகில்
வீழ்ந்ததில் உறைந்திடவும்
தற்பரன் அருள் இங்கு தான் இழக்கவும் வேண்டில்,
எப்படியும் குடியும் இளைத்துச் சுணங்கிக்கொண்டு,

3.சற்றும் விருப்பம் வேண்டாம்-மதுவில், அது
சதித்துக் கெடுத்து விடுமே;
முற்றும் இயேசுபரன் மேல்-உரிமையாக
முழுதும் அன்படைந் தவரைப்
பற்றி விசுவாசித்து, பரகதிக் காளாக
உற்ற மதுக் குடியை உடனே விடுதல் நன்றே .

Maththiya Paanaththil Miga Niththiyam song lyrics in English

Maththiya Paanaththil Miga Niththiyam Karuththu Vaikkum
Maanidarae Kealirae

Puththi Malungavum Num Pugal Alinthidavae
Siththam Umakkundaanaal Thealinthu Kudiyum Summa

1.Paambai Madiyil Vaipaaro Palaginaalum
Bayam Intri Athai Moipparo
Veambu Kasappil Enbaaro Mathu Kudikka
Virumbukinteer Nallatho
Naam Pisakoam Entrum Nadanthu Thirivom Entrum
Veembugal Solvathean Vluveer Viluveer Kaanum

2.Kai Porul Ilanthidavum Puthalvarodu
Kaathalai Alinthidavum
Mei Porul Marainthidavum Eri Naragil
Veelnththathil Urainthidavum
Tharparan Arul Ingu Thaan Elakkavum Veandil
Eppadiyum Kudiyum Ilaiththu Sunangikondu

3.Sattrum Viruppam Veandam Mathuvil Athu
Sathithu Keaduthu vidumae
muttrum Yesuparan Mael Urimaiyaga
Muluthum Anbadainthavarai
Pattri Visuvasithu Parakathi kalaaga
Uttra Mathu Kudiyai Udanae Viduthal Nantrae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo