வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் – Vazhnthalum Thazhnthalum
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் – Vazhnthalum Thazhnthalum
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்
கர்த்தருக்குள் மகிழ்வேன்
கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை
பிரிக்க முடியாது என்றென்றுமே – வாழ்
1. பசியோ பட்டினி வியாகுலமோ
கவலைகள் துன்பம்
நேரிட்டாலும்
அன்றாடம் இயேசுவை நான்
என்றென்றும் பாடிடுவேன்
2. வல்லமை நிறைந்த வானவரே
எனக்காய் வந்த தூயவரே
யார் என்னை கைவிட்டாலும்
என்றும் உம்மை மறவேனே
3. காரிருள் நிறைந்திட்ட உலகிலே
பெயர் சொல்லி அழைத்த என் தேவனே
உந்தனை பின் செல்லவே
என்னையே அர்ப்பணித்தேன்