விண்ணக நிலவோ தேவனின் – Vinnaga nilavo devanin
விண்ணக நிலவோ தேவனின் – Vinnaga nilavo devanin
விண்ணக நிலவோ தேவனின் மகவோ
இப்பூவில் உதித்ததுவோ
பனிவிழும் இரவில் மழலையின் குரலோ எங்கெங்கும் ஒலித்ததுவோ
ஒளிதரும் நிலவாய் பூவுலகில் வந்தாரே
பவ இருள் போக்க வையம் வந்தாரே
மலர்ந்திடும் மலராய் பூவுலகில் வந்தாரே
மன இருள் போக்க மண்ணில் வந்தாரே
தூதரும் பாடிட பாலனாக வந்தாரே
ஆயர் மகிழ்ந்திட தேவன் வந்தாரே
மழலை உருவிலே மன்னவரும் வந்தாரே
மனதின் இருள் நீக்கவே
சரணம் :
அன்பின் உருவாக வந்ததும் ஏனோ
பாரில் எனக்காக பிறந்ததும் ஏனோ
பாதை காட்டி என்னை நடத்திடத் தானோ
பாவி எனையும் நீர் மீட்டிடத் தானோ
உயிரின் உறவாய்
உலகின் ஒளியாய்
என் வாழ்வின் விடி வெள்ளியாய்
அகிலம் அழகாகவே பிறந்தீரே
அன்பின் உருவாகவே பிறந்தீரே – விண்ணக
ஆதியும் அந்தமும் ஆனவர் நீரே
ஆயுள் வரை எம்மைக் காப்பவர் நீரே
அல்பா ஓமேகாவும் ஆனவர் நீரே
அன்னை போல் என்னை அணைப்பவர் நீரே
உயிரின் உறவாய்
உலகின் ஒளியாய்
என் வாழ்வின் விடிவெள்ளியாய்
அகிலம் அழகாகவே பிறந்தீரே
அன்பின் உருவாகவே பிறந்தீரே – விண்ணக
Vinnaga nilavo song lyrics in English
Vinnaga nilavo devanin magavo
Ipoovil udhithadhuvo
Panivilum iravil malalayin kuralo
Engengum olithadhuvo
Olitharum nilavai poovulagil vandharae
Pavairul poka vaiyam vandharae
Malarndhidum malarai poovulagil vandharae
Manairul poka mannil vandharae
Dhootharum paadida paalanaga vandharae
Aayar magilndhida devan vandharae
Malali uruvilae mannavarum vandharae
Manadhin irul neekavae
Anbin uruvaga vandhadhum yeno
Paaril enakaga pirandhadhum yeno
Paadhai kaati ennai nadathida thaano
Paavi ennayum neer meetida thaano
Uyirin uravai ulagin oliyai
En vaalvin vidivelliyai
Agilam alagagavae pirandhirae
Anbin uruvagavae pirandhirae
Aadhiyum andhamum aanavar neerae
Aayul varai ennai kaapavar neerae
Alba omaegavum aanavar neerae
Annai Pol ennai anaipavar neerae
Uyirin uravai ulagin oliyai
En vaalvin vidivelliyai
Agilam alagagavae pirandhirae
Anbin uruvagavae pirandhirae