
இதோ இயேசு இதோ – Idho Yesu Idho song lyrics
இதோ இயேசு இதோ – Idho Yesu Idho song lyrics
இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ நம்மை மீட்க இதோ
தன்னிகரில்லாதவர் உலகை படைத்தவர்
தாழ்மை உருவில் தோன்றினார்
தூதர்களும் இதோ பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும் அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் உள்ளம்தான் இதோ
1.பாரினிலே முன்னனையிலே அன்பின் தேவன் பிறந்தார்
மனம் மகிழ உள்ளம் குளிர இம்மானுவேலனாய் பிறந்தார்-2
பள்ளங்களும் இதோ மேடாகுது -2
பாசராஜன் தோன்றினார் – தூதர்களும்
2.பனியிலே கடும் குளிரிலே வெள்ளையுள்ளம் பிறந்தார்
சுடரொளியாய் சுகமளிக்க மானிட உருவில் பிறந்தார் -2
சாரோன் ரோஜா இதோ சாலேம் ராஜா இதோ -2
நேச ராஜன் தோன்றினார் – தூதர்களும்