இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae
இயேசு தேவனை வாழ்த்திடுவோமே
இன்ப துதிகள் செலுத்திடுவோமே
எம்மை நேசிப்பவர் இவர் தாமே
எங்கள் ஆத்தும இரட்சகராமே
கண்ணின் மணிபோல காத்தார்
கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர்
சாலேமின் ராஜா சாரோனின் ரோஜா
சமாதானப் பிரபு நம் இயேசுவே
தேவ சமாதானம் நதி போல்
தேவ வசனமோ பனி போல்
கன்மலை வெடிப்பில் தங்கிடும் சபையில்
கிருபையோடு வந்திறங்குதே
நீதிமான்களைப் பனை போல்
நல்ல கனி தரும் மரம் போல்
வேலி அடைத்திட்ட சிங்கார வனமாய்
வற்றாத நீருற்றாய் மாற்றுகிறார்
வாசிப்போம் தினம் வேதம்
நேசிப்போம் இயேசு நாமம்
இறுதி காலம் விழிப்படைவோம்
இடைவிடாமல் ஜெபித்திடுவோம்
இயேசு நமக்காக வருவார்
மேகமீதினில் ஒரு நாள் – முந்திக்
கொள்வோம் நாம் இயேசுவை சந்திக்க
மறுரூபமாய் பறந்திடுவோம்
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam
- கண்ணின்மணி போல – Kanninmani Pola Kathu