இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom

Deal Score0
Deal Score0

1. இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம்
லோகம் நடுங்க
நரகாக்கினையைச் சொல்வோம்
பாவமடங்க
பூர்வகால தேவ தாசர்
விஸ்தரித்தாற் போல்
மோட்சலோகம் போகு முன்னே

பல்லவி

செல்வோம் செல்வோம்
ஆர்ப்பரிப்புடனே;
செய்வோம் செய்வோம்
போர் பலத்துடனே
நானா ஜாதி பாஷைக்காரர்
இரட்சிப்படைய
மோட்சலோகம் போகுமுன்னே

2. சேனையாரின் யுத்த சத்தம்
பூமியெங்கும் கேள்!
மீட்படைந்த பேதைகளின்
சாட்சிகளுங் கேள்!
முழு லோகத்தையும் வெல்ல
இன்னும் கொஞ்சநாள்;
மோட்ச லோகம் போகுமுன்னே – செல்வோம்

3. தீதாய்ச் சத்துருக்களென்ன
சொன்ன போதிலும்
சுத்த ஆவியின் பலத்தை
பெற்று யாவிலும்;
உண்மையாகப் போர் புரிந்தால்
வெல்வோம் சாவிலும்
மோட்சலோகம் போகு முன்னே – செல்வோம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo