நன்றி கர்த்தாவே நன்றி – Nandri Karthavae Nandri
நன்றி கர்த்தாவே நன்றி கர்த்தாவே
ஆண்டுகள் தோறும் உம்மைப் பணிவோமே
1. புல்லுள்ள இடங்களில் மேய்த்து எம்மை
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர்.
2. நீரே எங்களுக்கு மேய்ப்பராய் இருக்க
நாங்கள் ஒருபோதும் தாழ்ச்சியடையோமே.
3. மரண இருளின் பள்ளத்தாக்கிலுமே
தேவரீர் என் கூட இருக்கின்றீர்.
4.சத்துரு முன்பாக ஒரு பந்தி வைத்து
நிந்தைகள் யாவையும் நீக்குகிறீர்.
5. ஆண்டின் துவக்கம் முதல் இறுதி வரைக்கும்
உமக்கு துதிகள் செலுத்திடுவோமே.



