
பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam song lyrics
1. பாவக் கறைகள் எல்லாம் நீங்கி
தண்டனைக்குத் தப்பினேன்
சுத்த ஆவி உம் வல்லமையால்
பூரண மீட்பிப்போ தாரும்
பல்லவி
சுத்த ஆவியே வாரும்!
சித்தம்போல் செய்ய வாரும்
உள்ளத்தின் தடைகளை நீக்கி
உமக் கேற்ற வீடாய் ஆக்கும்
2. வாரும் ஆவியே சுத்தஞ் செய்யும்
மெய் சிந்தை மனமெல்லாம்
என்னைக் குருசி லறைந்திடும்
என் இயேசுவைப் போலாக்கிடும் –
3. எனக்காய் மாண்ட ஆண்டவர்க்காய்
போரிடப் பலம் தாரும்
கல்வாரி மேட்டின் தயவை நான்
பாவிக்குக் காட்டச் செய்திடும்
4. பூரண ஆனந்த சந்தோஷம்
கிடைத்த தெனக் கும்மால்;
திவ்ய கிருபையால் நிரப்பி
என்னை உம் வீடாய் ஆக்கினீர்