
பாவ சாபம் நீங்கிடுது – Paava Sabam Ningiduthu song lyrics
1. பாவ சாபம் நீங்கிடுது
ஆத்மா சுத்தமாகுது
இருள் எல்லாம் மாறிடுது
ஜீவ ஆற்றண்டை வந்தால்
பல்லவி
நம்பிப் பெற்றுக் கொள்ளுகிறேன்
ஜீவ ஆற்றலைகளில்,
நெஞ்சில் மகிழ் கொள்ளுகிறேன்
பாவம் போயிற்றானதால்
2. துன்பம் பயம் நீங்கிடுது
ஜீவ ஆற்றலைகளில்;
துக்கம் துன்பம் ஆகிடுது
ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி
3. சொகுசு செல்வம் குப்பையாம்
லோக இன்பம் வெறுப்பாம்;
மீட்பரே எந்தன் இன்பமாம்
ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி
4. சுய நேசம் கர்வமும்
முழுவதும் மாறிப்போம்;
மீட்பரின் அன்பு செல்வமாம்
ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி