
தேவாதி தேவன் மகத்துவத்தை – Devathi Devan Magathuvaththai
தேவாதி தேவன் மகத்துவத்தை – Devathi Devan Magathuvaththai
பல்லவி
தேவாதி தேவன் மகத்துவத்தை-ஆத்மமே
ஆவலாய் த்யானி, அன்பின் கிருபை மயமே.
அனுபல்லவி
ஏகோவா வெனும்-ஏக சக்ராதிபதி
என்றென்றும் பரிசுத்த-ரெனப் போற்றும் மோக்ஷபதி
சரணங்கள்
1.அண்ட சராசரம் சிருஷ்டித்தவர்
அளவுக் கெட்டாச் சர்வ-ஞான மிகுந்தவர்
தொண்டர் ரக்ஷைக் காய்ச் சுதனை விடுத்தவர்
தொல்புவியோர் மோக்ஷ்ம் பெறப் பாதை காண்பித்தவர் -தேவா
2. நேற்று மின்று மென்றும் மாறாதத் தன்மையோன்,
நேர்மை பிசகாதோர்க் கானந்த வாய்மையோன்,
வேற்றுமையின் நிழல் தோன்றாத் தூய்மையோன்,
வேண்டிக்கொள்வோர்க் கருளேராளமாய்ப் பொழிவோன் –தேவா
3, அலகைக் காளாகாம லருமை மைந்தனை விட்
டன்பா யெமை மீட்ட எம்பரனே ஸ்துதி,
உலகில் யாம்பிழைத் தசைவதும் முடிவில்
‘உம்பரோ டின்புற் றோசன்னா சொல்வதும் கதி -தேவா
Devathi Devan Magathuvaththai Song lyrics in English
Devathi Devan Magathuvaththai Aathmamae
Aavalaai Thiyaani Anbin Kirubai Mayamae
Yehova venum Yeha Sakrathibathi
Entrentrum Parisuththar Ena Pottrum Moshabathi
1.Anda Sarasaram Sirustiththavar
Alauv Kettaa Sarva Gnana Migunthavar
Thondar Ratchai Kaaya Suthanai Viduviththavar
Tholpuviyor Motcham Pera Paathai kaanbiththavar
2.Neattru Mintru MEntrum Maaratha Thanmaiyoan
Nearmai Pisakathor Kaanantha Vaaimaiyon
Veattrumaiyin Nizhal Thontraa Thooimaiyoan
Veandikolvorkku Karuloraalamaai Pozhivoan
3.Alagai Kaalakaama Larumai Mainthanai
Vittanba Emai Meetta Embaranae Sthuthi
Ulagil Yaampilai Thasavathum Mudivil
Umbarodin Puttrosanna Sollum Kathi