Allelujah Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர்
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
1. இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே
அல்லேலூயா!
2. கொடூர சாவை மேற்கொண்டார்
பாதாள சேனையை வென்றார்
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்
அல்லேலூயா!
3. இந்நாள் எழுந்த வேந்தரே,
என்றைக்கும் அரசாள்வீரே!
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!
4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்
அல்லேலூயா!