Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக
1. அருள் மாரி எங்குமாக
பெய்ய அடியேனையும்
கர்த்தரே நீர் நேசமாக
சந்தித்தாசீர்வதியும்
என்னையும் என்னையும்
சந்தித்தாசீர்வதியும்
என்னையும் என்னையும்
சந்தித்தாசீர்வதியும்.
2. என் பிதாவே, பாவியேனை
கைவிடாமல் நோக்குமேன்
திக்கில்லா இவ்வேழையேனை
நீர் அணைத்துக் காருமேன்
என்னையும் என்னையும்
நீர் அணைத்துக் காருமேன்
என்னையும் என்னையும்
நீர் அணைத்துக் காருமேன்
3. இயேசுவே நீர் கைவிடாமல்
என்னைச் சேர்த்து ரட்சியும்
ரத்தத்தாலே மாசில்லாமல்
சுத்தமாக்கியருளும்
என்னையும் என்னையும்
சுத்தமாக்கியருளும்
என்னையும் என்னையும்
சுத்தமாக்கியருளும்
4. தூய ஆவி கைவிடாமல்
என்னை ஆட்கொண்டருளும்
பாதை காட்டிக் கேடில்லாமல்
என்றும் காத்துத் தேற்றிடும்
என்னையும் என்னையும்
என்றும் காத்துத் தேற்றிடும்
என்னையும் என்னையும்
என்றும் காத்துத் தேற்றிடும்
5. மாறா சுத்த தெய்வ அன்பும்
மீட்பர் தூய ரத்தமும்
தெய்வ ஆவி சக்திதானும்
மாண்பாய்த் தோன்ற செய்திடும்
என்னிலும் என்னிலும்
மாண்பாய்த் தோன்ற செய்திடும்
என்னிலும் என்னிலும்
மாண்பாய்த் தோன்ற செய்திடும்