
என் மேய்ப்பர் நீர்தானையா – En Meippar Neerthaanaiya
என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறைவேயில்லை
நான் ஏன் கலங்கணும்
என் ஆயன் இருக்கையிலே
1.நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
உம் மகிமை விளங்கும்படி
2.ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்
புது உயிர் தருகின்றீர்
3.எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
விருந்து படைக்கின்றீர்
4.நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
உம் கிருபை பின் தொடரும்
5.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
பயமில்லையே பயமில்லையே
வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா
6.தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது