
என்னை உம் கையில் தருகின்றேன்- Ennai Um kaiyil Tharukintren
என்னை உம் கையில் தருகின்றேன் – Ennai Um kaiyil Tharukintren
என்னை உம் கையில் தருகின்றேன்
ஏக்கமாய் உம்மண்டை வருகின்றேன் 
என்னை அழைத்தவர் நீரல்லோ 
இந்த பெலத்தோட செல்கின்றேன்
என் அன்பே ஆருயிரே – என்றும் 
உம் மடியில் தலை சாய்ப்பேனே
நான் உம்மை அறியவில்லை
நீர் என்னை அறிந்தீரே – இந்த 
சிறியனை உம் பக்கம் இழுத்தீரே 
என்னை அழைத்தவர் நீரல்லோ 
இந்த பெலத்தோட செல்கின்றேன் – அன்பே
தகுதியற்ற என்னை கண்டீர் 
கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்
உந்தன் சித்தம் செய்ய 
அபிஷேகம் அருளினீர் 
என்னை அழைத்தவர் நீரல்லோ 
இந்த பெலத்தோடே செல்கிறேன் – என் அன்பே
தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)
சங்கீதம் 68 : 7


                                    