Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே
Ennodu Iruppavare Yesuvae – என்னோடு இருப்பவரே இயேசுவே
என்னோடு இருப்பவரே இயேசுவே
எனக்காக வாழ்பவரே
கோடான கோடி உள்ளங்கள் தேடி
பாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே
என்னில் வாழ்வது நானுமல்ல
இயேசுவே என்னில் வாழ்கின்றீர்
கர்த்தர் என்பெலனும் கீதமுமானீர்
கன்மலையுமானீர் – கர்த்தாவே என்
நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர்
அல்லேலூயா அல்லேலூயா
உம்மில் என்னை மறந்தேனய்யா
காற்றும் கடலும் கல்மழையும்
கானம் பாடிபோற்றுமே
துள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்
தூயவர் புகழ் பாடுமே
சிறகுகள் அடித்திடும் பறவையுமே
சிந்தை குளிர்ந்திட துதித்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா
நானும் சேர்ந்து துதித்திடுவேன்
சூரிய சந்திரன் நட்சத்திரங்கள்
சூழ்ந்து உம்மை போற்றுமே
வானிலும் பூவிலும் உள்ளவை யாவும்
வாழ்த்தி வலம் வருமே
வானுக்கும் பூமிக்கும் உயர்ந்ததல்லோ
வானவரே உம் மகிமையல்லோ
அல்லேலூயா அல்லேலூயா
துதி கனம் மகிமை உமக்கே
- Neer Enna Marakala – Benny Joshua
- Ulagin Meetparae – உலகின் மீட்பரே
- Kartharai Sthothari – கர்த்தரை ஸ்தோத்தரி
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae