Kaaalamae Devanai Thedu – காலமே தேவனைத் தேடு
பல்லவி
காலமே தேவனைத் தேடு;-ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு.
அனுபல்லவி
சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு;
சீரான நித்திய ஜீவனை நாடு. – காலமே
சரணங்கள்
1. மன்னுயிர்க்காய் மரித்தாரே,-மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே;
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு!
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு. – காலமே
2. பாவச் சோதனைகளை வெல்லு;-கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு,
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய்; மனுவேலனைப் பணிய. – காலமே
3. சிறுவர்கள் என்னிடஞ் சேரத்-தடை
செய்யா திருங்களென்றார் மனதார;
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்;
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும். – காலமே
4. வேலையுனக்குக் கைகூட,-சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட,
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே,
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே. – காலமே