Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

Deal Score+1
Deal Score+1

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

கல்வாரி சிநேகம் என்னை இழுக்குதே
கல்மனம் எல்லாம் ஓ..கரையுதே-2

உனக்காக எனக்காக
அவர் வடித்த அந்த இரத்தம்
அது கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-கல்வாரி

கை கால்களில் ஆணி பாய
தாகத்தால் என் மீட்பர் துடிக்கின்றாரே
அது களைப்பின் தாகமோ
இல்லை ஆத்ம பாரமோ-2
அதுதான் கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

அழகை இழந்த உந்தன் அழகு முகமே
எந்தன் வாழ்க்கையை அழகாக மாற்றியதே
உம் அழகை இழந்தீர்
உம் ஜீவன் தந்தீர்-2
அதுதான் கல்வாரி சிநேகம்
என்னை கரைக்கும் சிநேகம்-2-உனக்காக

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo