Karthaavin Arputha seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை
கர்த்தாவின் அற்புதச் செய்கை
புத்திக்கெட்டாததாம்
பொங்கு கடல் கடுங்காற்றை
அடக்கி ஆள்வோராம்
தம் வல்ல ஞான நோக்கத்தை
மா ஆழமாகவே
மறைத்து வைத்தும், தம் வேளை
முடியச் செய்வாரே
திகில் அடைந்த தாசரே
மெய் வீரம் கொண்டிடும்
மின் இடியாய்க் கார் மேகமே
விண்மாரி சொரியும்
உம் அற்ப புத்தி தள்ளிடும்
நம்பிக்கை கொள்வீரே
கோபமுள்ளேராய்த் தோன்றினும்
உருக்க அன்பரே
மூடர் நம்பிக்கையின்றியே
விண்ஞானம் உணரார்
தெய்வத்தின் ஞானம் தெய்வமே
வெளிப்படுத்துவார்