Kirubai | Tamil live soaking worship medley
பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2
உடைத்தீர் உருவாக்கினீர்
சிருஷ்டித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் என்னை புதிதாக்கினீர்
பிரித்தீர் என்னை பிரியாதிருந்தீர்
எனக்கு யார் உண்டு
நான் கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே-2-உடைத்தீர்
(நான்) உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
நான் ஒன்றும் இல்லா நேரத்தில் எல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது-2
ஓ..கிருபையே கிருபையே
மாறாத நல்ல கிருபையே-2
உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது-2-கிருபையே
உம் கிருபையினாலே நான் வாழுகின்றேனே…
எனக்கா இத்தன கிருப
என் மேல் அளவற்ற கிருப-2
என்ன விட எத்தன பேர் தகுதியாக இருந்தும்
என்ன மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
என்ன விட எத்தன பேர் தகுதியாக இருந்தும்
என்ன மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
உங்க கிருபை என்ன வாழ வைத்ததே
உங்க கிருபை என்ன தூக்கி சுமக்குதே-2
ஓ..என்ன விட எத்தன பேர் தகுதியாக இருந்தும்
என்ன மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே
என்ன விட எத்தன பேர் நல்லவனாக இருந்தும்
என்ன மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே
உங்க கிருபை என்ன வாழ வைத்ததே
உங்க கிருபை என்ன தூக்கி சுமக்குதே-2
உங்க கிருபைக்காக நன்றி
உங்க தயவுக்காக நன்றி-2
ஆ..அ…அ..ஆ…அ..அ..
(நீர்) என்னை விட்டுக்கொடுக்கலையே
நீர் மறக்கவில்லையே
வெறுக்கவில்லையே
புறக்கணிக்கவில்லையே-2
விட்டுக்கொடுக்கலையே
விட்டுக்கொடுக்கலையே
சாத்தான் கையிலும்
மனுஷன் கையிலும்
விட்டுக்கொடுக்கலையே-2
கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல
என்னைத்தேடி வந்தீங்க
எந்த மனுஷன் உதவுல
நீங்க வந்து நின்னீங்க-2
– விட்டுக்கொடுக்கலையே
அப்பா.. நல்ல தகப்பனை போல
உங்க கிருபை என்னை தாங்குதே
உங்க தயவோ என்னை தாங்குதே
கிருபையே கிருபையே
மாறாத நல்ல கிருபையே-2
உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது-2
அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
ஆதியாகமம் | Genesis: 6:3
- என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam




