Mangalam Satha Jeya Mangalam – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா
பல்லவி
மங்களம் சதா – ஜெய – மங்களம் வேதா!
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா.
சரணங்கள்
1. அணைத்துக்காத்தவா, – உல – கனைத்தும் படைத்தவா;
இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா. – மங்களம்
2. யேசுநாயகா, – எம் – நேசநாயகா!
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா. – மங்களம்
3. ஞானவாரியே, – திரு – வானமாரியே!
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா. – மங்களம்