
Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும்
1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,
வதைக்கப்பட்ட தேகமும்,
என் ஆவி தேகம் உய்யவே
என்றைக்கும் காக்கத்தக்கதே.
2. அவர் விலாவில் சாலவும்
வடிந்த நீரும் ரத்தமும்
என் ஸ்நானமாகி, பாவத்தை
நிவிர்த்தி செய்யத்தக்கதே.
3. அவர் முகத்தின் வேர்வையும்
கண்ணீர் அவஸ்தை துக்கமும்,
நியாயத்தீர்ப்பு நாளிலே
என் அடைக்கலம் ஆகுமே.
4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,
ஒதுக்கை உம்மிடத்திலே
விரும்பித் தேடும் எனக்கும்
நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும்.
5. என் ஆவி போகும் நேரத்தில்
அதை நீர் பரதீசினில்
சேர்த்தென்றும் உம்மைப் போற்றவே
அழைத்துக் கொள்ளும், கர்த்தரே.