Paraloka Thutharkalae Sirustipil paadinaar – பரலோக தூதர்களே சிருஷ்டிப்பில் பாடினீர்
1. பரலோக தூதர்களே!
சிருஷ்டிப்பில் பாடினீர்
மேசியாவின் ஜென்மம் கூறும்
பறந்து உலகெல்லாம்
வாரும் தொழும் (2)
தொழும் கிறிஸ்து ராஜனை!
2. மந்தை காக்கும் மேய்ப்பர்களே!
மாந்தனானாரே தேவன்,
பாலனேசு வெளிச்சமாய்
பாரில் பிரகாசிக்கிறார்
வாரும் தொழும் (2)
தொழும் கிறிஸ்து ராஜனை!
3. நம்பிக்கை பயத்துடனே,
பணியும் சுத்தர்களே!
சடுதியாய் கர்த்தர் தோன்றி
காட்சியளித்திடுவார்
வாரும் தொழும் (2)
தொழும் கிறிஸ்து ராஜனை!
4. நித்ய ஆக்கினைக்காளான
துக்கமுறும் பாவிகாள்!
நீதி சாபம் மாற்றிடுது,
க்ருபை பாவம் போக்குது
வாரும் தொழும் (2)
தொழும் கிறிஸ்து ராஜனை!