Poorana Ratchipalikka – பூரண இரட்சை யளிக்க
1. பூரண இரட்சை யளிக்க
ஜீவ ஊற்றின் தீர்த்தமே!
வற்றாமல் இன்னும் ஓடுது,
மீட்பர் காயத்திருந்தே!
என்னுள்ளத்தில்
ஜீவ நதி பாயுது!
2. அல்லேலூயா என்று பாட
வல்லமையாய் மாற்றுதே!
எல்லாப் பாவம் முற்றும் நீக்கி
பரிசுத்த மாக்குதே!
மாசு நீக்கி
துல்யமாக ஆக்குது!
3. தேவாதி தேவனின் அன்பு
என்னில் பெலன் செய்யுதே!
ஆத்தும எண்ணங்களெல்லாம்
சுத்தியாக்கப்பட்டதே!
சுத்தமானேன்
கல்வாரியின் இரத்தத்தால்!
4. சந்தேகம் துக்கம் பயமும்
என்னை விட்டு நீங்கிற்று!
நம்பிக்கை அன்பு விஸ்வாசம்
என்னை ஆட்சி செய்யுது!
இயேசுவினால்
திருப்தியானேன் எப்போதும்!