Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
1.சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா
தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா
2.தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த
தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா
3.இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்
இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா
4.அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று
அறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா