Tharuname Parama Sareera Enai- தருணமே பரம சரீரி எனை
எனைத் தாங்கி அருள், கருணைவாரி
பல்லவி
தருணமே, பரம சரீரி – எனைத்
தாங்கியருள் கருணை வாரி
அனுபல்லவி
உரிமை அடியார் அனுசாரி – உயர்
எருசலை நகர் அதிகாரி – அதி
சரணங்கள்
1. வரர் அடி தொழும் வெகு மானி – பரன்
மகிமை ஒளிர் தேவ சமானி
நரர் பிணை ஒரு பிரதானி – இயேசு
நாயகன் எனதெஜமான் நீ – அதி – தருணமே
2. ஆதாரம் உனை அன்றி யாரே? – எனை
அன்பாய்த் திருக்கண் கொண்டு பாரே;
பாதாரவிந்தம் கதிசேரே – இஸ்ரவேல்
பார்த்திபன் தாவீது வம்ச வேரே – அதி – தருணமே
3. நித்த நித்தமாக எந்தன் மேலே – வருவ
தெத்தனை துன்பங்கள் ஒருக்காலே;
அத்தனையும் நீக்குதற்குன் காலே – எனக்
குத்தம துணை தான் மனுவேலே – அதி – தருணமே
4. கங்குல் பகலும் துயரம், கோவே – வரும்
கலக்கம் ஒழித்தெனைத் தற்காகவே
பங்கெனக்குத் தந்த மெய் மன்னாவே – ஏழைப்
பாவியை இரட்சியும் இயேசு தேவே – அதி – தருணமே