தென்னைமரத்து பின்னலுக்குள்ள – Thenna Marathu

Deal Score0
Deal Score0

தென்னைமரத்து பின்னலுக்குள்ள – Thenna Marathu Pinnalukulla Old Tamil Christian Christmas Folk songs lyrics.

தென்ன மரத்து பின்னலுக்குள்ளே மின்னலும் தெரியுது
அது உன்னைய பார்த்து என்னைய பார்த்து எதையோ சொல்லுது
மின்னலும் காத்து இங்கிதமான சங்கதி சொல்லுது
இயேசு மன்னன் பிறந்த செய்தியைதானே சுமந்து செல்லுது
நம்ம காதிலே சொல்லுது -2 – தென்னமரத்து

(மின்னலும் காத்தும் மழையும் வந்து பொழுது சாயுது
கொஞ்சம் திணையும் புல்லும் சேரு முன்னே
தொழுவம் சேருது இடை தொழுவம் சேருது -2)

பாடிடுவோமே தந்தனதனா
பாடிடுவோமே தெம்மாங்கு தானே -2
சும்மா உறுமி மேளம்
பாடிடுவோமே

காடு மேடு மலையை தாண்டும் இடைய கூட்டமே
நாம வெயிலு பணி பாராமே அலைஞ்சு வந்தோமே -2
சாமி பிறந்த சங்கதி கேட்ட சாதி ஜனங்க நாமதான் -2

காசு பணம் காணாத வறுமை கூட்டமோ வாழ கடனை
வாங்கி அடிமையாகி போன ஜனங்களும் -2
மீட்டிடத்தானே மீட்பர் பிறந்தார்
வாருங்க ஒண்ணா பார்த்து வரலாம்-2
நம்ம ராசன தானே அவர் மேசியாவாமே
பாடிடுவோமே தெங்கதானே பாடிடுவோமே

ஆட்டுக்கொரு கஷ்டம்னா உயிரையே கொடுப்போம்
குட்டி ஆடுகளை தோலில் போட்டி சுமந்தே செல்லுவோம் -2
காணாமல் போனா தேடி அலைவோம்
கண்டுபிடிச்சால் கொஞ்சி மகிழ்வோம் – பாடிடுவோமே

தென்னைமரத்து பின்னலுக்குள்ள song lyrics, Thenna Marathu Pinnalukulla song lyrics, Tamil songs

Thenna Marathu Pinnalukulla song lyrics in English

Thenna Marathu Pinnalukullae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo